கொவிட்-19 என்னும் Corona Virus Disease தொற்று சீனாவின் ஹூபே மாநிலத்தின் தலைநகர் உஹானிலிருந்து சென்ற டிசம்பரில் பரவத்தொடங்கி சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளை உலுக்கிக்கொண்டிருக்கிறது. பாரதூரமான விளைவுகளை விதைத்துக்கொண்டிருக்கும் இத்தொற்றின் தாக்கம் அரசாங்கங்களும் உலகெங்குமுள்ள சுகாதார அமைப்புக்கள் மற்றும் அலுவலர்களும் சந்திக்கும் மாபெரும் சவாலாக அமைந்ததோடன்றி மக்கள்திரளைப் பீதிகொள்ளச்செய்யும் சூழலையும் உருவாக்கிவிட்டது. உலகச் சுகாதார அமைப்பு இத்தொற்றுச் சூழல் இப்படியே தொடருமானால் உலகம் முழுமைக்குமான ஒரு நோய்ப் பரவல் எச்சரிக்கை பிரகடனப்படுத்தப்படும் நிலை உருவாகலாம்…