கட்டுரை : செ.ப.பன்னீர்செல்வம் “மொழி மனிதனின் விழி என்பதை மறவாதே” என்று என் மொழி ஆசிரியர்கள் சொல்லித் தந்தார்கள். எனக்கு வாய்த்த தமிழ் ஆசான்கள் மொழியின்பால் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள். அதனால்தான், எனக்கும் மொழியின்பால் ஒரு ஈர்ப்பு என்றுமே இருந்து வந்திருக்கிறது எனலாம். இன்று பல்வேறு நாடுகளில் தமிழ் பேசுவோர் இருக்கின்றார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலோர், மொழியை மறந்துவிடும் நிலைதான் அதிகரித்து வருகின்றது. ‘எனக்குத் தமிழ் தெரியாது’, ‘எனக்கு தமிழ் அவ்வளவாக வராது’ என்பவர்களை என்னவென்று சொல்வது?…