யாரிந்த கரோனா? சீனாவில் ஹீபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் தொற்று ஏற்பட்டது. இப்போது உலகில் கிட்டத்தட்ட 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ்ஸுக்கு ஏன் இந்தப் பெயர் என்று பார்த்தால் அது ஒரு காரணப்பெயர். வைரஸ் எலக்டரான் நுண்ணோக்கியில் பார்த்தால் வைரஸ் துகளைச் சுற்றி கிரீடம் போல் அமைப்பு இருப்பதால் கரோனா என்று பெயர் வந்தது. கரோனா என்றால் கிரீடம். கரோனா வைரஸ் கிருமி புதியது அல்ல. 1960களில்…