சிங்கப்பூரில் கொரோனாவின் தாக்குதல் ஜனவரி மாத சீனப் புத்தாண்டின்போதுதான் சீனாவின் செய்தி மூலம் தெரிய வந்ததெனினும், அந்த விடுமுறையில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் செல்ல திட்டமிட்டபடியால், விமான நிலையம் சென்ற பின்தான் தெரிந்தது நிலைமையின் தீவிரம். முகக்கவசம் அணிந்த சீன முகங்களின் கூட்டங்கள் ஒருவித பயத்துடனும் பீதியுடனும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். எட்டு நாட்களுக்கு பின் திரும்ப சாங்கி விமான நிலையம் வரும் வரை பெரிதாக அங்கே ஏதும் தோன்றவில்லை. சென்ற ஒரு சில இடங்களில் சீனப் பயணிகளின் கூட்டம்…