முன்னுரை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே மலாயாவிற்குத் தமிழர் புலம்பெயர்வு இருந்தபோதிலும் 19ம் நூற்றாண்டின் முற்பாதியில் சிங்கப்பூர், பினாங்கு, மலாக்கா ஆகிய நீரிணைக் (ஸ்ட்ரெயிட்ஸ்) குடியேற்றப்பகுதிகளில் அடிமைமுறை ஒழிப்பும், பிறகு தொடர்ந்த பொருளாதார வளர்ச்சியை ஒட்டி அதிகரித்த உடலுழைப்புத் தொழிலாளர் தேவையும் சிங்கப்பூர் உட்பட்ட அன்றைய மலாயாவிற்குத் தமிழர் புலம்பெயர்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்தது.1 தமிழகத்தின் தாதுவருடப் பெரும்பஞ்சம் (1876-78), நீராவிக்கப்பல் போக்குவரவுக்கு மானியம் (1887), அன்றைய பர்மா, சிலோனோடு ஒப்பிடுகையில் ஒப்பந்தமுறை ஒழிக்கப்பட்டபின் மலாயாவில் அதிக தினக்கூலி கிட்டியது…