என்னுடய அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஆய்வுக்கும் பரிச்சயமான இயல்களுள் ஒன்று ஊடகவியல். அந்த இயலின் ஒரு சில்வெட்டாகத் தொடங்கியதுதான் மின்னிதழ் இயல். ஆங்கில மின்னிதழ் பற்றி ஓரளவு தெரியுமென்பதால், அதனையொட்டிய வரலாற்றுக் குறிப்போடு தொடங்க விரும்புகிறேன். நாம் மின்னிதழ் என்று சொல்வதை ஆங்கிலத்தில் ezine – அதாவது electronic magazine என்பதைச் சுருக்கி, ezine என்று வழங்கினார்கள். சுமார் 35, 40 ஆண்டுகளுக்கு முன்னரே மின்னிதழ்கள் ஆங்கிலத்தில் தொடங்கிவிட்டன. கடந்த 1990-களில் நான் பணியாற்றும் கொள்கை ஆய்வியல் கழகத்தில்…