பிற ஆசிய நாடுகளின் புத்தாண்டைப் போலவே சீனப் புத்தாண்டும் நிலவின் சுழற்சியைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. சீனர்கள் மத்தியில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்த 15 நாள் விழாக் கொண்டாட்டங்கள் களைகட்டும். ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20-க்குள் வரும் அமாவாசை தொடங்கி அந்த முழு நிலவு வரும் 15 நாள்களுக்குள் எல்லா கொண்டாட்டங்களும் நிகழும். சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுவதற்குப் பின் ஒரு குட்டி புராணக் கதை உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நியன் (ஆண்டு) என்ற…