சீனப் புத்தாண்டு கொண்டாட்ட விருந்தில் மிக முக்கிய இடம் யு ஷெங்குக்கு உண்டு. அதென்ன யு ஷெங்? ‘Prosperity toss’ – அதிர்ஷ்ட சுண்டல்தான் சீன மொழியில் யு ஷெங். புத்தாண்டு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதாக சீனர்கள் நம்புகிறார்கள். அப்படி அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் உணவு வகைகளில் முக்கியமானது இந்த பெயருக்கேற்ற யு ஷெங். கேன்டனீஸ் வகை பச்சை மீன் சாலடுதான் இது. சீனாவின் குவாங்தோங் பகுதியில் தோன்றியதாகச் சொல்லப்படும் இந்த எளிய சாலடை சிங்கப்பூர் மக்களுக்கு…