இதுவரை மனிதகுலத்தை தாக்கிய கொள்ளை நோய்கள் தலைகீழ் மாற்றங்களை அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்தியிருக்கின்றன. உணவுக் கலாசாரத்தில் கொள்ளை நோய்களும் போர்களும் ஏற்படுத்திய வடுக்கள் வரலாறுநெடுகிலும் காணக் கிடைக்கின்றன. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து, மக்கள்தொகை மிக அதிகமான அளவை எட்டிய பதினான்காம் நூற்றாண்டுவரை இறைச்சியும் பால் பொருட்களும் தனி நபர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்திருக்கின்றன. பெரும்பாலும் தானிய உணவுகளையே பொதுமக்கள் சார்ந்திருக்க… மேல்தட்டுமக்களின் உணவில் இறைச்சியும் பாலும் தாராளமாக இருக்க, எளிய மக்களின் சாப்பாட்டுமேசைகளில் சுருட்டி வைக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் இடம்பெற்றிருந்தன எனப் பழமையான கையெழுத்துப்பிரதிகள் தெரிவிக்கின்றன. Photo by Jez Timms on Unsplash செல்வந்தர்கள் வீட்டில் மிகச் சிறந்த கோதுமையைக் கொண்டு அற்புதமான வெள்ளை ரொட்டி pain de main என்ற பெயரில் இருக்க (`வீட்டில் தயாரிக்கப்பட்டது’…