கடந்த சனிக்கிழமையன்று பூங்கோல் பகுதியில் காட்டுப்பன்றிகள் மக்களைத் தாக்கியதை அடுத்து 20 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தேடுதல் நடைபெறுவதாக மேற்கு பூங்கோல் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சன் சூலிங் கூறியுள்ளார். தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தாக்கப்பட்டவர்களுக்காக வருத்தம் தெரிவித்திருக்கும் சன், அவர்கள் விரைவில் முழு நலமடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த சனி இரவு முதலே பன்றிகளைத் தேடுவது தொடர்கிறது என்றும், என்-பார்க்ஸ் மூலம் பூங்கோல் வாட்டர்வேஸ் பகுதி சாலைகளில் எச்சரிக்கை பதாகைகளும், ஒருவேளை பன்றிகளைப்…