படம்: கிராஞ்சி கானகம், நன்றி: CNA கிராஞ்சி பகுதியின் 4.5 ஏக்கர் கானகம் தவறுதலாக அழிக்கப்பட்டதற்கு “மேற்பார்வை பொறுப்பு” ஏற்பதாக ஜேடிசி கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. கமிஷன் செய்யப்பட்ட சுற்றுச் சூழல் ஆய்வுகள் முடிவதற்கு முன்னரே இந்தப் பகுதி ஒப்பந்ததாரரால் தவறுதலாக அழிக்கப்பட்டது என்று ஜேடிசி அறிவித்துள்ளது. இது சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று நடைபெற்ற ஊடகக் கூட்டத்தில், மொத்தமுள்ள 25 ஹெக்டேர் நிலப்பரப்பில் 11.9 ஹெக்டேர் அக்ரி-டெக்னோ பூங்காவுக்காக அழிக்கப்பட்டது…