குறும்புக்கார கணவனோ, மனைவியோ ஒருவருக்கு அமைந்துவிட்டால், வீட்டுக்குள் நடக்கும் காமெடி சரவெடிக்கு அளவே இருக்காது. அதை நினைத்து ரசிக்கத் தொடங்கிவிட்டால், நடக்கும் குபீர் களேபரத்துக்கு முன் கொடூர கொரோனா கூட, அவ்ளோதான்! மலேசியாவின் கெடா (Kedah) மாகாணத்தைச் சேர்ந்த ஜூனைரா ரஹ்மான் (Junairah Ab Rahman) என்ற பெண்ணின் கணவரும் அப்படித்தான் போலிருக்கிறது. வழக்கம்போல அன்று வீட்டுக்கு வந்த ஜூனைராவின் கணவர், அவர் கையில் சிறுபெட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்ததுமே ஜூனைராவுக்கு எக்கச்சக்க மகிழ்ச்சி….