இந்த வாரம் முதல் 50,000 டாக்சி மற்றும் வாடகை கார் ஓட்டுனர்கள் தங்கள் பெயர்களை கோவிட் தடுப்பூசி போட பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசி திட்டத்தின் பகுதியாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் வாடகை கார் மற்றும் டாக்சி ஓட்டுனர்களின் அலைபேசி எண்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்யும் சுட்டி, குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தரைப் போக்குவரத்து ஆணையம் (லேன்ட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி-LTA) அறிவித்துள்ளது. படம்: Straits Times…