கொரோனாவுக்கான நடமாட்டக் கட்டுப்பாடு உள்ள பகுதிகளில், ஓட்டல் நடவடிக்கைகளை நிறுத்த அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததை அடுத்து, மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (MCO 2.0) இப்போது விதிக்கப்பட்டு இருக்கிறது. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, வேகமாக உயர்ந்த நிலையில், இந்த அறிவிப்பை பிரதமர் முகைதீன் யாசின் கடந்த மாதம் அறிவித்தார். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் ஓட்டல் உள்ளிட்ட கடைகள், வணிக வளாகங்கள்…