மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், முதல் நபராக கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டார். இதையடுத்து தடுப்பூசி போடும் பணி அங்கு தொடங்கி இருக்கிறது. சீனாவில் உருவான கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவியதை அடுத்து, ஏராளமானவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது புள்ளி விவரம். இந்த தொற்று பரவத் தொடங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும், இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப் படவில்லை. சீனாவைத் தொடர்ந்து பிரிட்டனில் பரவத் தொடங்கிய…