துவாஸில் தொழிற்சாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பத்து தொழிலாளர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆணையர் (WSH) சிலாஸ் சங் வியாழக்கிழமை (பிப்ரவரி 25) தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இரண்டு தொழிலாளர்கள் தகுந்த சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். துவாஸ் அவென்யூ 11-ல் ஏற்பட்ட விபத்து `எரியக்கூடிய தூசி வெடிப்பு’ (combustible dust explosion) காரணமாக ஏற்பட்டது என…