இளையர் பக்கம்: ரியாசத் அலி காட்டுக்குள் இட்டுச் செல்லும் ரயில் பாதை. பயணிகளின் படபடப்போ அவசரமோ இல்லை. கிளமெண்டி சாலைக்குக் கீழே அமைந்துள்ள தண்டவாளங்கள் எங்கு செல்கின்றன? அவற்றின் வரலாறு என்ன? தற்போது வெறிச்சோடிக் காணப்படும் நிலைக்கு முன்னதாக அவை கடந்தபாதைகள் எவை? இவற்றுக்கான விடைகளைத் தேடும் பணியில் களமிறங்கினேன். 1965-ம் ஆண்டு திறக்கப்பட்ட புக்கிட் தீமா ரயில் நிலையத்திலிருந்து ஜூரோங் தொழிற்பேட்டைக்குச் சென்ற அந்தத் தடத்தின் நீளம் சுமார் 19 கிலோமீட்டர். சிங்கப்பூருக்குச் சொந்தமான இரண்டு…