சிங்கப்பூரில் முருகனின் புன்முறுவல் – பகுதி 2 சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவை 1977-ம் ஆண்டு முதல் ‘சிங்கப்பூரில் தமிழும் தமிழிலக்கியமும்’ என்ற ஆய்வரங்க மாநாட்டுத் தொடரை, ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வந்தது. அந்த மாநாட்டுத் தொடர் வரிசையில், 5-வது மாநாடு 1985-ம் ஆண்டு கூட்டப்பட்டபோது இக்கட்டுரை படைக்கப்பட்டது. இதன் உரை வடிவம் வானொலி வழியாக பலரையும் சென்றடைந்தது. சிறு மாற்றங்களுடன் அது இங்கே மீள்வெளியீடு காண்கிறது. அதன்பின் 35 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போதைய சூழலைக்…