கடந்த வெள்ளி (மார்ச் 26) அன்று சிங்கப்பூர் வரும் புலம் பெயர் ஊழியர்களுக்கான புதிய தங்கும் விடுதியை பொங்கோல் பகுதியில் மனிதவளத்துறை அமைச்சகம் திறந்தது. இந்த மையத்தில் புதிதாக வரும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், தங்கும் இட வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர யூனோஸ் மற்றும் தெங்கா ஆகிய இடங்களில் இது போல மூன்று மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு புதிதாக வரும் ஊழியர்களுக்கும், ஏற்கனவே மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அரசு தடுப்பூசி போடப்படும் என்று மனிதவளத்துறை…