அரசு கேட்டுக்கொண்ட பின்பும் கடன் மறுசீரமைப்புக்கு 75 சதவிகித பேருந்து ஆபரேட்டர்கள் விண்ணப்பிக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக, பல்வேறு தொழில் நிறுவனங்கள் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்துள்ளன. பேருந்து நிறுவனங்களும் இந்தச் சிக்கலில் பலமாக விழுந்திருக்கின்றன. இந்நிலையில் இவர்கள் வங்கி மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ள கடன் மற்றும் தவணைகளை மறுசீரமைக்கும் வகையில், தற்காலிக நிதியுதவி திட்டத்தை, மலேசிய அரசு டிசம்பர் மாதம் தொடங்கியது. இதை உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர்…