இன்று இரவு எட்டு மணிக்கு (சிங்கப்பூர் நேரம்) மேதன் அர்பன் ஃபோரம் (Medan Urban Forum) ஒருங்கிணைக்கும் வெபினார் நிகழ்வில் இந்தோனேசியத் தமிழர் குமாரசாமி அவர்களைப் பற்றி முனைவர் அ.வீரமணி உரையாற்றுகிறார். “1976-ம் ஆண்டில் (மே முதல் ஜூன் வரை) மேதன் தமிழர்கள் குறித்து படிப்பதற்காக மேதனில் தங்கினேன். நான் சந்தித்த அனைத்துத் தமிழர்களும் திரு.டி.குமாரசாமியை நான் சந்திக்கவேண்டும் என்று வழிகாட்டினார்கள். சுருக்கமாக டி.கே என்றும், அவரது தீவிர அபிமானிகளால் ‘அண்ணா’ என்றும் குறிப்பிடப்படும் குமாரசாமியை இரண்டு…