தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகள் விரைவில் தொடங்கப்படும் என்று மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பைசர் -பயோன்டெக் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்துறை மூலம் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தடுப்பூசிகளை வாங்குவதற்கு தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட இருக்கிறது. இதுபற்றிய அமைச்சர் ஜமாலுதீன், இந்த வருடத்தின் மூன்று அல்லது நான்காம் காலாண்டில் தனியார் மருத்துவமனைகளுக்கு…

