உலக சுகாதார நாளை முன்னிட்டு பிரதமர் லீ சியன் லூங் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் உலக நாடுகள் அனைத்தும் எந்தப் பாகுபாடுமின்றி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகக் கூறியுள்ளார். படம்: Straits Time “இன்று உலக சுகாதார தினம். உலக சுகாதார அமைப்பின் (WHO) இவ்வாண்டு பிரச்சாரம், அனைவருக்கும் சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதன் தேவையை வலியுறுத்துகிறது. அனைத்து நாடுகளிலும் தொற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏழை நாடுகளிலும், நலிவடைந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளிலும்…

