வாழைமர நோட்டு ஹேமா வாசிப்பு: அனிஷா மரைக்காயர் ஊரில் ‘ஒம்பது ரூவா நோட்டு’ என்றால் ஒண்ணுக்கும் உதவாத செல்லாத மனிதர்களை குறிக்கும்சொல். ஆனால், இந்த ‘வாழைமர நோட்டு’ என்பது இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பான் அரசாங்கத்தால் சபா-சரவாக்-புருணை-சிங்கப்பூர் போன்ற அந்தக் கால ஒன்றுபட்ட மலேயா தேசத்தில் புழக்கத்தில் கொண்டு வரப்பட்ட கரன்சி. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் டாய் நிப்பான் படைகளின் எழுச்சியையும், தனது சொந்த பொருளாதாரத் தேவைகளுக்காக தெற்காசியாவிற்குள் நுழைந்த வரலாற்றையும் மிக துல்லியமான தரவுகளை கொண்டு சிங்கப்பூரின் நிலத்துண்டின் மீது நிகழ்ந்த நிகழ்வுகளை மட்டும் அருமையாகக் கோத்து இருக்கிறார். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது சிங்கப்பூரில் தினசரி வேலைநிமித்தமாக நாம் சென்று வரும் பகுதிகளை உலுக்கிய குருதி சரித்திரங்களை காண நேர்கிறது. வார இறுதியில் ஜோகூர் செல்ல தேர்ந்தெடுக்கும் ‘காஸ்வே பாலம்’ முன்னொரு காலத்தில் ஜப்பானியப் படைகள் உள்நுழைவதற்கு தடை…