மலாக்காவின் நிலமும் அதில் வாழும் அடிமைகளும் போர்த்துக்கீசியர்களுக்கே சொந்தம் என்ற புது விதி அமலுக்கு வருகிறது. மலாய் மன்னர்கள் ஆட்சியிலிருந்தபோது மலாக்காவிலிருந்த அடிமைகளுக்குத் தங்களின் எஜமானர்களுக்குச் சேவை செய்த நேரம் போக மற்ற சமயங்களில் வேறு பணிகளை மேற்கொண்டு வருமானம் ஈட்டும் சுதந்திரம் இருந்தது. இந்தப் புது விதி அவர்களுக்குச் சிரமத்தை உண்டாக்குகிறது. அடுத்து, வணிகத்தில் போர்த்துக்கீசியர்களின் அதிகாரம் மேலோங்குகிறது. இது ஆசிய வணிகர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
– ஹேமா எழுத்தில் ‘ஆதிநிலத்து மனிதர்கள்’ தொடரை முழுமையாகப் படிக்க ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ அச்சிதழ் அல்லது இணையப் பதிப்புக்கு சந்தா செலுத்துங்கள்.