மீன் செதில்களில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் மூலக்கூறுகள் மனித எலும்பின் வளர்ச்சிக்கும், தவளையின் தோலில் உள்ள கொலாஜென் மூலக்பொருள் திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. இதன் மூலம் எலும்பு முறிவு சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் வேகமாகக் குணமடையும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் திசுக்களுக்காக நோயாளியின் உடலில் வேறு இடங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தேவை குறையும்.