நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி சோவா சூ காங் வாட்டர்வொர்க்ஸ் நீர் நிலையம் புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. S$29 மில்லியன் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவடைந்து, 2026-ம் ஆண்டில் பயன்பாட்டுக்குத் தயாராகும் என்று சிங்கப்பூரின் தேசிய நீர் ஆணையம்(PUB) அறிவித்துள்ளது. நீர் சுத்திகரிப்பின் செயல்பாடுகள், பராமரிப்பு, பாதுகாப்பு என அனைத்தும் புதிய நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களின் அடிப்படையில் சிறப்பான திறன்களை உறுதிப்படுத்தும்.