என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆளுமைகளைச் சந்திக்கும் பேறு பெற்றவன். அத்தனை பேரிலும், பேரா. ஆனந்தகிருஷ்ணனுக்குத் தனி இடம் உண்டு. அறிவாற்றலும் செயலாற்றலும் ஒன்றுகூடிஇருப்பதே அரிது என்று நினக்கவைக்கும் சூழலில் அவற்றோடு விவேகமும் பெருந்தன்மையும் கலந்திருப்பது இன்னும் அரிது. அவ்வளவு அரிதான கலவைதான் பேராசிரியர். எங்களில் பலர் அவரிடம் பல்கலைக் கழகத்தில் படிக்காமலே அவரைப் பேராசிரியராக ஏற்றுக் கொண்டோம். எப்போதுமே Prof என்றேதான் அழைத்தோம். தமிழ் இணைய உலகத்தில் சிங்கப்பூருக்கு முன்னணி இடத்தை எற்படுத்திக் கொடுத்தவர்களுள் மிக முக்கியமானவர். உலகளாவிய தமிழ் இணையவளர்ச்சிக்கு ஆணி வேராக இருந்தவர். வயதில் மிக மூத்தவராக இருந்தபோதும் மிகப் புதிய முயற்சிகளைப் புரிந்து கொண்டவர். எளிதில் நிரப்ப முடியாத இடத்தை விட்டுச் சென்றிருக்கின்றார்.
– அருண் மகிழ்நன் அவர்கள் எழுதிய பேராசிரியர் நினைவலைகளை முழுமையாக வாசிக்க ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழுக்கு சந்தா செலுத்துங்கள்!