கபிலன் வைரமுத்து கைவண்ணத்தில் மலர்ந்துள்ள இரண்டாவது சிறுகதை தொகுப்பு. நூலின் வித்தியாசமான தலைப்பே நூலைப் புரட்ட வாசகர்களைத் தூண்டும் என்பது உறுதி. அம்பறாத்தூணி எனும் சொல் அம்புகளைச் சேகரித்து வைக்கப் பயன்படுத்தப்படும் அம்புக்கூட்டைக் குறிக்கிறது. அதற்கேற்ப 15 சுவாரசியமான கதைகளின் அடக்கமாக இந்நூல் மலர்ந்துள்ளது. போரின்போது அம்பறாத்தூணியில் உள்ள ஒவ்வொரு அம்பும் ஒவ்வோர் இலக்கை நோக்கிப் புறப்படுவது போல நூலில் உள்ள ஒவ்வொரு கதையும் வாசகர்களிடத்து வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. பல கதைகளில் நகைச்சுவை இழைந்தோடுகிறது.