எனக்கு ஏன் அந்தக் கனவு திரும்பத் திரும்ப வர வேண்டும்? எதிர்பாராத ஒரு கணத்தில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் திடீரெனப் புறப்பட்டுக் கனவில் கண்ட கோவிலை ஏன் நிஜத்தில் காண வேண்டும்? ஓரிறைத் தத்துவத்தைப் பின்பற்றி உருவமற்ற இறைவனை வணங்கும் இனத்தில் பிறந்த நான் ஏன் இங்கு வரவழைக்கப்பட்டேன்? இக்கேள்விகள் எதற்கும் இன்றுவரை என்னால் விடைகாண முடியவில்லை.