நாம் உண்ணும் உணவை நம்மால் தீர்மானிக்க முடியுமா? அது கிட்டத்தட்ட இயலாத காரியம். நம் உணவைத் தீர்மானிப்பவர்களை இப்படி வேண்டுமானால் வரிசைப் படுத்தலாம்.
விவசாயிகள், உணவுப் பொருள் விற்பனையாளர், மருத்துவர்கள், சமையல்காரர்… நம்முடைய தேர்வின் விருப்பம் மிகக்குறைந்த சதவீதமாகத்தான் இருக்க முடியும்.
அனைவரும் விரும்பக்கூடிய உணவுப் பொருட்கள் கடந்துவரும் பாதைகள் நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம் நிறைந்தவையாக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தற்காலத்தில் உயிர்ப்புள்ள (Organic foods) உணவுகளை உண்ண வேண்டும் என்ற இயக்கம் உலகில் வெகுவேகமாகப் பரவிவருகிறது.