உலகம் முதலில் கண்ட
தற்கொலைத் தீவிரவாதி!
சிக்கிமுக்கிக் கல்லுக்கும்
சிகார்லைட்டருக்கும்
இடைக்கால நிவாரணி!
ஒல்லிக்குச்சி போல
உடலிருந்து என்ன பயன்?
உப்பிய தலையால் அழிவு!
ஆக்கவும் உதவுகிறாய்…
அழிக்கவும் உதவுகிறாய்
நீ பிரம்மனா? எமனா?
உரசினால் பற்றிக்கொண்டு
உயிரையே விடுகிறாயே…
உனக்கும் காதல் நோயோ..!
தீக்குச்சி!!!