உயிர்ப்பு – கவிஞர் லதா

0
140

‘என் இனம்பெருக்கவே
உன்னைப் பூத்தேன்’ என்று
மரபணுக்கள் வண்ணம்பூசி
வாசனை தடவியபோது
நான் இறக்கவில்லை.
என்னை மலர்வித்த பனிக்காலை
‘மாலையில் உன் மரணம்’ என்றபோது
நான் இறக்கவிலை.
என் இதழ்களின் ஈரம்
குழந்தையின் இளமைபோல்
களவாடப்பட்டபோதும்
நான் இறக்கவில்லை.
உதிர்ந்த கணத்தில்
இலைகளின் சூட்டிலிருந்து
நகர்ந்துபோன நொடியில்
என் நிழலில் இருந்து அந்நியப்பட்டு
உன்னோடு ஒட்டிக்கொண்ட
பொழுதில்தான்
என் இறப்பு நிகழ்ந்தது.

This content is for paid members only.
Login Join Now