கான்கிரீட் காடுகள் – கவிஞர் நெப்போலியன்

0
145

புளோக்குகளில்
குழாய்க்குச்சிகளைக்
கொத்துகிறது குருவி.
கூட்டம் கூட்டமாய்க்
குழுமிக் கொள்கின்றன
வாகன நிறுத்தப் பேட்டைகளில்
புறாக்கள்.
பரபரப்பான சாலையை
சாவகாசமாய்க் கடக்கிறது
ஒரு மைனா.
துப்பாக்கியுடன் வருபவரைத்
தூரத்தில் அடையாளம் கண்டே
கரையாமல் கவனமாய்க் கலைகின்றன 
காகங்கள்.
கான்கிரீட் காடுகளுக்குப்
பழக்கமாயிருக்கின்றன
பறவைகள். 

This content is for paid members only.
Login Join Now