இனி வரும் படைப்புகள் சில ஆண்டுகளுக்குப் பின் அச்சிலேயே வராது போகலாம். ஆனால், மின்னணு வடிவாகவிருக்கும் சிங்கப்பூர் படைப்புகள் இணையத்தில் இருக்கும். இணையத்தில் அது ஒரு டேட்டாபேஸ், ஒரு பெரிய கதைத்தொகுதி, ஒரு தொன்மக் குவியல், ஒரு தொன்ம விளையாட்டுக் களம். எப்படி வேண்டுமென்றாலும் எங்கிருந்து வேண்டுமென்றாலும் நுழையலாம். எந்தப் பகுதியை வேண்டுமென்றாலும் வாசிக்கலாம். இது காகிதம் அகன்றபின் நீடிக்கப்போகும் எழுத்து.