”கொவிட்-19 தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கொவிட்-19 தொற்றுக்கு எதிரான உங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும். இந்தக் கூடுதல் டோஸை நிபுணர் குழு என்னைப் போன்ற 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும், பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மூத்தோருக்கும், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள நபர்களுக்கும் பரிந்துரைத்துள்ளது.
குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு முன் இரண்டு தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட மூத்தோர் பூஸ்டர் தடுப்பூசியை முன்பதிவு செய்வதற்கான இணைப்பைக் கொண்ட எஸ்எம்எஸ் பெறுவார்கள். உங்களுக்கு பூஸ்டர் வழங்கப்பட்டால், தயவுசெய்து எடுத்துக் கொள்ளுங்கள். இது தீவிர நோய்வாய்ப்படுவதற்கான உங்கள் வாய்ப்புகளைக் குறைக்கும். ஐசியூ பராமரிப்புக்குள் செல்வதை இதைத் தடுக்கும்” என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.