ங்களின் கலங்களில் நிரப்பிக் கொண்டு அவர்கள் திரும்பும் சமயம் பொழுது சாய்ந்துவிடுகிறது. படர்ந்து விட்டிருந்த இருளில் தங்களின் கப்பல் நிற்கும் திசை அவர்களுக்குப் புலப்படவில்லை. தங்களின் படகிலிருந்து சமிஞ்ஞைகளைக் காட்டி தங்களுடன் வந்த பயணக்குழுவினரைத் தொடர்பு கொள்ள முயல்கிறார்கள். ஆனால் பதிலுக்குக் கப்பலிலிருந்து துப்பாக்கி வெடித்தோ, விளக்குகள் காட்டியோ எதிர் சமிஞ்ஞைகள் எதுவும் வரவில்லை.