பல இதழ்கள் வாசகனின் கருத்துகளை வெளியிட்டுள்ளன. ஆனால், ஒரு வாசகனுடனான கலந்துரையாடலாக எந்த இதழும் முன்னெடுத்துள்ளதா என்பது தெரியாத நிலையில், சிங்கப்பூரில் பணிபுரிந்துகொண்டு ஒய்வு நேரங்களில் நூலகம் இலக்கிய நண்பர்களுடனான தொலையாடல் என்று பயணித்துக் கொண்டிருக்கும்
ஒரு வாசகனுடன் இரவு நேரத்தில் பல அடுக்கு குடியிருப்பின் பூங்கா பகுதியில் அமர்ந்து பேசிய விசயங்களை இங்கு அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அந்த வாசகன் முகம் தேவையா என்ற கேள்விக்கும் அந்த வாசகனே தேவையில்லை என்றதன் அடிப்படையில் உரையாடல் தொடர்கிறது.