விருந்தினர் திருப்தியே வாடிக்கையாளர் திருப்தி-மாலிக் ஷாபாஸ்

வாழ்நாளில் ஒருமுறை வரும் வைபவங்களில் ஒன்றான திருமணத்தை எப்படியெல்லாம் செய்யவேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். அத்தகைய கனவுகளை மெய்ப்பித்துத் தரவேண்டிய பொறுப்பிலுள்ள திருமணவிழா நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். வாடிக்கையாளர்களின் தேவைகளில் கவனம் செலுத்தி, குளறுபடிகள் ஏதுமின்றி நடத்தி முடிப்பது பெரும் சவால்.

மாலிக் ஷாபாஸ்
திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

ஒன்றைத் திட்டமிடும்போது அதற்கு மாற்று ஏற்பாட்டையும் கூடவே திட்டமிட வேண்டும். செய்யமுடியாமற் போனதற்கு நியாயமான காரணம் இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்குக் காரணம் தேவையில்லை, காரியம் நல்லபடியாக முடியவேண்டும். கோவிட் காலத்தில் நோய்த்தொற்று நிலவரத்துக்கேற்ப விருந்தினர் எண்ணிக்கையைக் கூட்டவோ குறைக்கவோ செய்வார்கள் என்பதால் அதற்கேற்ப அணுகுமுறைகளை உடனுக்குடன் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.

திருமண நிகழ்வு ஏற்பாட்டாளர், தன் வாடிக்கையாளர்களைவிட அவர்களின் விருந்தினர்களைத் திருப்திப்படுத்துவது முக்கியம். அதில் வெற்றிபெற்றிருக்கிறேன் என்று நம்புகிறேன். என் நிறுவனத்தின் வளர்ச்சி சமூகப் பங்களிப்பில் ஈடுபடவேண்டி செய்யப்பட்ட முயற்சி. இன்னும் இன்னும் சிறப்பு, மேலும் மேலும் கவனம் இதுதான் என் நிறுவனத்தின் தாரக மந்திரம். அதுவே என் தொழிலின் தர்மம்.