எரிமலை

வித்யா அருண்

புதிதாகச் சீரமைக்கப்பட்ட நொவீனா அலுவலகத்தில், மேசைகளை ஊழியர்களின் உயரத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடிகிறது. அங்கங்கே சிவப்பு நிற சோபாக்களில், அமர்ந்து பேசவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

இப்போது அலுவலகத்தில் முன்னைவிட அதிக இடம் இருக்கிறது. எல்லார் முகங்களிலும் கூட பொங்கலுக்கு வெள்ளையடித்தாற்போன்ற பொலிவு இந்தப் புது அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் தெரிந்தது.

சிரித்துக்கொண்டே அவரவர் அட்டைப்பெட்டிகளைப் பிரித்து அடுக்கி கொண்டிருந்தார்கள். ஐரீனின் பெட்டிகள் நிரம்பி வழிந்தன. ஈரமான, காய்ந்த திசுத்தாள்களில் தொடங்கி, பல நிறங்களில் நோட்டுப் புத்தகங்கள், பென்சில், பேனா, ரப்பர் இத்யாதிகள், வைட்டமின் மாத்திரைகள், காலை சாப்பாட்டுக்கு மியூஸ்லி, ஹெர்பல் தேயிலைப் பைகள், காபி போத்தல், அவளுடைய காலணி, மேலே போர்த்திக்கொள்ளும் பஷ்மினா ஷால் என்று பலவும் இருந்தன.ஒவ்வொருவரின் பழக்கவழக்கங்களும், அவர்கள் எத்தனை ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள் என்பதற்கான குறியீடாகவும் அந்தப் பெட்டித் திறக்கும் படலம் இருந்தது.

ஐரீன் நாற்பதுகளின் ஆரம்பத்திலிருக்கும் நான்காம் தலைமுறை சிங்கப்பூர்க் குடிமகள். அவ்வப்போது பேச்சில் வெளிநாட்டுக்காரர்கள் சிங்கப்பூருக்கு வருவதால், சிங்கப்பூரர்களுக்கான வாய்ப்புகள் குறைவது பற்றிய அங்கலாய்ப்புத் தெரியும்.
புதிதாக வந்திருக்கும் சவிதா ஐரீனின் அணித்தலைவர். வந்த சில வாரங்களிலேயே எல்லாரையும் புரிந்துக்கொண்டுவிட்ட சவிதா, ஒவ்வொருவருடனும் தனியே பேச நேரம் ஒதுக்கியிருந்தாள். ஐரீனின் முறை வந்த போது, ‘நியூயார்க்’ அறையினுள் நுழைந்தாள்.

“வாங்க. உங்களோட வேலையில முன்னேற நீங்க வெச்சுருக்குற குறிக்கோள் என்ன, நான் உங்களுக்கு ஒரு மேலாளரா அதுக்கு எப்படி உதவணும்னு இன்னிக்கு பேசலாமா?”

கணீரென்ற குரலில் பேசிய சவிதாவின் உடல்மொழி, அவள் தன்னம்பிக்கைக்காரி என்று சொல்லாமல் சொல்லியது. அவளின் சராசரிக்கும் அதிகமான உயரமும் அந்தத் தன்னம்பிக்கைக்குத் துணையானது.

‘‘வாங்க. உங்களோட வேலையில முன்னேற நீங்க வெச்சுருக்குற குறிக்கோள் என்ன, நான் உங்களுக்கு ஒரு மேலாளரா அதுக்கு எப்படி உதவணும்னு இன்னிக்கு பேசலாமா?”

“நான் இந்த கம்பெனில பதினாலு வருஷமா வேலை செய்யுறேன். எனக்கு இப்போ இருக்கற வேலையே நல்லாதான் இருக்கு.” சொல்லிவிட்டு, கண்களை நேர்பார்வையிலிருந்துத் தவிர்த்தாள் ஐரீன்.

எதையோ மனதில் வைத்துக்கொண்டு விரிவாகப்பேச மறுக்கிறாள் என்று தெரிந்தது.

“சரி. நான் என்னைப்பத்தி சொல்றேன். நான் சிங்கப்பூருக்கு வந்து அஞ்சு வருஷமாச்சு. இந்தியாவுல சில ஆண்டுகள் வேலை பார்த்துட்டு, என் கணவர், மகனோட இங்க வந்துருக்கேன். என் பையனுக்கு ஆறு வயசாகுது. வேலைக்கு வரது அம்மாக்களுக்கு கஷ்டம்தான். ஆனா நம்மளை மாதிரி படிச்சுட்டு வரவங்களுக்கு இது ஒரு உற்சாகத்தைத் தர்றதை நான் உணர்ந்திருக்கேன்.

எனக்கும் வேலை செய்யவும், எனக்கான இலக்குகளை அடையறதும் முக்கியமா இருக்கு. நாம இன்னொரு நாள் பேசுவோம். உங்களுக்கு என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க. ஆல் தி பெஸ்ட்”

“எனக்கு இந்த ஊரில் குழந்தைபெற்று வளர்ப்பதற்காக ஆயுளைத் தியாகம் செய்வதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஐ வாண்ட் டு ரிடையர் அர்லி அண்ட் கோ அரௌண்ட் தி வோர்ல்ட்!” 

கூட்டத்தைச் சவிதா இத்தனை வேகமாக முடிப்பாள் என்று ஐரீன் எதிர்பார்க்கவில்லை.

அடுத்தடுத்த வாரங்களில் வேலை அதிகம் என்றாலும், எல்லாரோடும், உறவாடியபடி இருக்கும் சவிதா தனக்கான இடத்தை எல்லார் மனதிலும் பிடித்து விட்டாள்.

எல்லாருமாக உட்கார்ந்து சாப்பிடும் போது பேச்சு, சிங்கப்பூரில் கல்வி தரும் அழுத்தத்தைப் பற்றித் திரும்பியது.

ஐரீனின் மகளைப்பற்றிக் கேட்டறிவதில் குழுவிலிருந்த மற்றவர்களுக்கு ஆர்வம் இருந்தது. “ஷி ஐஸ் ஓகே லா. பட் திஸ் இயர் இஸ் நாட் ஈஸி” என்று நிறுத்திக்கொண்டாள். ஐரீனின் மகள் செரீன் இந்த ஆண்டு தொடக்கநிலை ஆறில் இருக்கிறாள். பெண் படிப்பில் படுசுட்டி. ஆனாலும் அவளைக் கண்டிப்புடன் வைத்திருந்தாள் ஐரீன்.

ஜூலி டாவ், “எனக்கு இந்த ஊரில் குழந்தைபெற்று வளர்ப்பதற்காக ஆயுளைத் தியாகம் செய்வதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஐ வாண்ட் டு ரிடையர் அர்லி அண்ட் கோ அரௌண்ட் தி வோர்ல்ட்!” என்றாள்.

நமக்காக வாழவே இங்கே நேரமில்லை என்னும்போது ஒரு குழந்தை வேறு எதற்கு என்பது அவள் வாதம்.

அடுத்த மாதக்கூட்டத்தில், ஐரீனின் வாழ்க்கையைப்பற்றி கேட்டுத்தெரிந்து கொண்டாள் சவிதா. அப்போது கொஞ்சம் லகுவாகப்பேசினாள் ஐரீன்.

“என் அப்பா நான் படித்து முடித்ததும் காலமாகிவிட்டார். அப்போதிலிருந்து நான் வேலை பார்க்கத் தொடங்கினேன். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். ஐடி துறையில் இதே ஊரில் வேலை பார்க்கிறாள். எங்களோடு பேச்சுவார்த்தையில் இல்லை. நான், என் கணவர், என் மகள், என் அம்மா – இது தான் என் உலகம்.” சொல்லும்போது குரல் சற்று உடைந்தது போலிருந்தது.

“என் மகள் குறைமாதப் பிள்ளையாகப் பிறந்தபோது, என் மாமனார் மாமியார் நான்தான் அவள் குறைமாதமாகப் பிறக்கக்காரணம் என்று குறை சொன்னதோடு, வேறு எந்த உதவியும் செய்யவில்லை. நான் என் அம்மா வீட்டில் வசிக்க ஆரம்பித்தேன். எங்கள் மகள், பேசி, நடந்து, வளர்ந்து, இன்று ஒவ்வொரு நிலையிலும், அவள்தான் எல்லாப் பாடத்திலும் முதல் மாணவியாக இருக்கிறாள்.”

“அப்படி சொல்ல முடியாது. பிஎஸ்எல்ஈல நல்ல மதிப்பெண் இருந்தாத்தான் இந்த இடத்தைத் தக்கவைக்க முடியும்.”

“எனக்கும் என் கணவருக்கும், ஒரே குறிக்கோள் எங்கள் மகளின் வளர்ச்சிதான். அவளைப் பூப்பந்து விளையாட அவர் பயிற்றுவிக்கிறார். என் மகள் அவளது பள்ளியின் முக்கிய ஆட்டக்காரியாக இருப்பதில் அவர் பங்கு அதிகம். அவள் பள்ளியிலிருந்து வந்ததும் என் அம்மா அவளைப் பார்த்துக்கொள்வார். படிப்பை நானும், என் கணவருமாகப் பார்த்துக்கொள்கிறோம்.”

“உங்க பொண்ணு ரொம்ப கொடுத்து வெச்சுருக்கா. உங்க கணவர் என்ன வேலை செய்யுறாரு?”

“அவர் ஒரு துவாஸ்ல ஒரு தொழிற்சாலைல வேலை செய்யுறாரு. அவர் தினமும் அதிகாலை வேலைக்கு போயிட்டு மூணு மணிக்கு என் மகளுக்காக வந்துடுவாரு.”

இத்தனை கஷ்டமா சிங்கப்பூர் கல்வி? நாம் என்ன ஆகப்போகிறோம் என்று பிசாசு போல மனம் கேட்ட கேள்வியை மறுதலித்துப் புன்னகைத்தாள் சவிதா.

“நீங்க இப்போ பார்க்கிற வேலையில எவ்ளோ நாளா இருக்கீங்க? நான் மற்ற குழு மேலாளர்கள் கிட்டயும் பேசிகிட்டுதான் இருக்கேன். ஒரு மாற்றம் வேணும்னு இருந்தா, அதைக்கண்டிப்பா ஏற்படுத்தித்தர முடியும்.”

“நான் எட்டு வருஷமா இந்த வேலையைப் பாக்குறேன். எனக்கு இது ஓகே. வேற மாற்றம், பதவி உயர்வு ரெண்டுமே வேணாம்.”

சொல்லிவிட்டு விடைபெற்றாள் ஐரீன். செய்த வேலையை திரும்பத் திரும்பச் செய்யும் சலிப்பை, மகளின் வெற்றியில் ஈடுகட்டுகிறாள் என்று தெரிந்தது. ஒரு குழுவில் ஒரே வேலையில் பல ஆண்டுகளாக ஒருவர் வேலை செய்யக்கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லையே.

முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டங்களின்போது ஐரீன் எத்தனை திறமைசாலி என்பது தெளிவாகத் தெரிந்தது. மற்றவர்கள் திணறும் இடங்களை அவள் எளிதாக ஊதித் தள்ளினாள். ‘பவர்பாயிண்ட்’ பக்கங்களில் எளிதாக அவளால் மேலிடம் கேட்கப்போகும் கேள்விகளை எதிர்நோக்கித் தயாரிக்க முடிந்தது. மனது வைத்தால், இந்த நிறுவனத்தின் ஆக உயர்ந்த பதவியில் கூடப்போய் உட்காரும் வல்லமை அவளுக்கு இருக்கிறது.

மற்றொருநாள் எல்லாருக்கும் சாக்லேட் கொண்டு வந்து நீட்டினாள் ஐரீன். அவள் மகளுக்கு சிங்கப்பூர் சீனப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், நேரடியாக விண்ணப்பித்ததில் படிப்போடு, பூப்பந்தில் வாங்கிய கோப்பைகளும் கைகொடுத்ததால் இடம் கிடைத்துவிட்டது.

“சூப்பர். இனிமே டென்ஷன் இல்ல.” என்ற சவிதாவிடம் “அப்படி சொல்ல முடியாது. பிஎஸ்எல்ஈல நல்ல மதிப்பெண் இருந்தாத்தான் இந்த இடத்தைத் தக்கவைக்க முடியும்.” என்றாள். இதுவரை முதல் மதிப்பெண் வாங்கிய சுட்டிப்பெண், இறுதித்தேர்வை மட்டும் விட்டுவைப்பாளா என்ன?

செரீன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவளிடம் முன்னர் இல்லாத பல மாற்றங்கள் ஆரம்பம் ஆயின.

“அம்மா. இதுவரைக்கும் படி படினு என் உயிரை எடுத்துட்டீங்க. இனிமே நான் பாத்துக்கறேன். என்னைத் தேவையில்லாம படுத்தாதீங்க”

பாடம் சம்பந்தமாக ஏதோ கேட்ட ஐரீனுக்குப் பதில் சொல்லிவிட்டு, தன் அறைக்கதவை “படால்” என்று அறைந்து சாத்தினாள் செரீன்.
ஐரீனின் அம்மா, மைலோ கரைத்துக் கொடுத்தபோதும், “என்ன எதுக்குத் தேவையில்லாம தொந்தரவு செய்யுறீங்க. நான் பாத்துக்கறேன்” என்று பதில் வந்தது.

மகளின் பாராமுகமும், வெறுப்பும், இதுவரை அவளைப் பற்றியிருந்த வெற்றி முகத்தின் நேரெதிர். ஐரீனின் நாட்கள் யாரிடமும் பகிர முடியாமல், கழிந்தன. அடுத்த சில மாதங்கள் பதின்பருவத்து மகளை விட்டுப்பிடிக்க நினைத்து, தன் வழக்கமான வேலைகளில் மூழ்கியிருந்தவளிடம்,

“ஹை, மீட் நியூ கமர் கிரேஸ் சான். ஷி இஸ் நியூ டு இண்டஸ்ட்ரி அண்ட் வில் ட்ரெயின் அண்டர் யு” சொல்லிவிட்டு நகர்ந்திருந்தாள் சவிதா. திருமணம் ஆகாத இருபத்தைந்து வயது கிரேஸுக்கு, இந்த குழுவில் ஆரம்பநிலை வேலை தரப்பட்டிருந்தது.

குட்டையான மெலிந்த தேகம் கொண்ட கிரேஸ், முட்டிக்கு மேல், தொடையை மறைக்கும் வண்ணமிருந்த அடர் நீல நிற கவுன் அணிந்திருந்தாள். நேரான தலைமுடியைத் தூக்கிக் குதிரைவால் போட்டிருந்தாள். ஒப்பனை கண்களிலும், உதட்டிலும் தனித்துத் தெரிந்தது.

ஐரீனுக்கு ஏனோ தன் தோற்றம் நினைவுக்கு வந்தது.

‘‘யார் சொல்லிக்கொடுத்தும் நான் என் வேலையை செய்யலை. இத்தனை வருஷத்துல என் வேலைல யாருமே ஒரு தப்பும் சொன்னதில்லை. தெரியுமா?”

ஒரு காலத்தில் கிரேஸ் போன்ற உடல்வாகோடு இருந்தவளுக்கு, தன்னுடைய எடை, தோற்றம் எதுவுமே முக்கியமாக இருந்ததில்லை. சவிதா ஐரீனை விட வயது குறைந்தவள். ஏனோ எல்லாரும் வேகமாகப் பயணம் போய்க்கொண்டிருக்கும் பாதையில், தான்மட்டும் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் அமர்ந்துவிட்டதைத் திடீரென்று உணர்ந்தாள் ஐரீன்.

மகளுக்காக என்றிருந்த வாழ்க்கை, இப்போது திசை மாறியதில், பயணத்தை முதலிலிருந்து தொடங்க வேண்டுமோ என்ற அச்சுறுத்தல் மனதைப் பிசைந்தது.

கிரேஸுக்கு வேலைகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தாள். உள்ளுக்குள் தன் மகள் எப்படி எதையும் உடனுக்குடன் கற்றுக்கொண்டே வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததோ, அதே எதிர்பார்ப்பை கிரேஸிடமும் கொண்டிருந்தாள்.
விளையாட்டாக இருந்த கிரேஸ், ஐரீனின் வேகத்தோடு ஈடுக்கொடுக்கத் திணறினாள். மீண்டும் மீண்டும் வேலையில் சந்தேகம் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

பொறுமை தீர்ந்து, “உனக்கெல்லாம் இத்தனை தடவை சொல்லித்தரத்தான் நான் இருக்கேனா? யார் சொல்லிக்கொடுத்தும் நான் என் வேலையை செய்யலை. இத்தனை வருஷத்துல என் வேலைல யாருமே ஒரு தப்பும் சொன்னதில்லை. தெரியுமா?”

காய்ந்த எண்ணையில் போட்ட கடுகுபோல வெடித்த ஐரீனுக்கு, அவளின் விஸ்வரூபத்தை உணர்த்த வல்ல, அவள் வாழ்வை மாற்றப்போகும் பதவி உயர்வுக் கடிதத்தை தயார் செய்தாள் சவிதா.