கரிகாற்சோழன் விருது 2021 & 2022

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பாக 2007ஆம் ஆண்டு தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை நிறுவப்பட்டது. அந்த அறக்கட்டளையின் வாயிலாக, ஆண்டுதோறும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்த சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்காக 2008ஆம் ஆண்டிலிருந்து “கரிகாற்சோழன்” விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2021ஆம் ஆண்டுக்கான விருதுகள்: இளந்தமிழன் (மலேசியா) – இளந்தமிழன் சிறுகதைகள்; ரமா சுரேஷ் (சிங்கப்பூர்) – அம்பரம் (பிரிவு: புதினம்); சிவ ஆரூரன் (இலங்கை) – ஆதுரசாலை (பிரிவு: புதினம்)

2022ஆம் ஆண்டுக்கான விருதுகள்: எம் கருணாகரன் (மலேசியா) – உள்ளங்கைக் கடவுளும் அஜந்தா பேரழகியும் (பிரிவு: கவிதை); பொன். சுந்தரராசு (சிங்கப்பூர்) – துமாசிக் (பிரிவு: சிறுகதைகள்); நோயல் நடேசன் (இலங்கை) – பண்ணையில் ஒரு மிருகம் (பிரிவு:புதினம்)

2021ஆம் ஆண்டு விருதுக்கு மலேசியாவிலிருந்து 4 நூல்களும், 2021ஆம் ஆண்டுக்கு இலங்கையிலிருந்து 8 நூல்களும், 2022ஆம் ஆண்டுக்கு 10 நூல்களும், 2021ஆம் ஆண்டுக்கு சிங்கப்பூரிலிருந்து 11 நூல்களும், 2022ஆம் ஆண்டுக்கு 4 நூல்களும் போட்டியிட்டன.