மொழிபெயர்ப்புக் கவிதை

0
163
மஹேஷ்

காலம்

காலம் என்பதுதான் என்ன?
அப்படி என்னதான் இது?
போய்க்கொண்டே இருக்கிறதே.
போகாமல் இருந்தபோது
எங்கே இருந்தது அது?
எங்காவது இருந்திருக்க வேண்டுமே.
கடந்து போய்விட்டது என்றால்…
இப்போது எங்கே அது?
எங்காவது இருக்க வேண்டுமே.
எங்கிருந்து வந்தது? எங்கே போனது?
எப்போதிலிருந்து எப்போது வரைக்குமானது இது?
காலம் என்பதுதான் என்ன?

என்னைப் பொறுத்தவரை
காலத்திற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை
என்பது ஏற்புடையதாயில்லை.
இது மிக மிக நீண்டதொரு இழைதான்.
இதன் தொடக்கம் எங்காவது இருக்கத்தான்வேண்டும்.
மனிதன் மயங்கிக்கிடக்கிறான்.
அவன் காலம் எனும் கூண்டினுள்ளேயே பிறந்து
அங்கேயே வளர்கிறான்.
காலக்கூண்டின் புறத்தேயும்
வேறொருவெளி உள்ளதென்பதை அறிந்தபின்
மேலும் மயக்கத்துடன் கேட்கிறான்….
காலம் என்பதுதான் என்ன?

கவிஞர் பற்றிய குறிப்பு

கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதாசிரியர், சமூக ஆர்வலர் என் பன்முகங்கள் கொண்ட ஜாவேத் அக்தர் குவாலியரில் பிறந்தவர். புதுக்கவிதைகளில் புதுத்தடம் பதித்தவர். 80களிலிருந்து இன்றுவரை இந்தி திரைப்படங்களுக்கு பலநூறு பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷன்,5 முறை தேசிய திரைப்பட விருதுகள் போன்ற விருதுகளுடன் ஞானபீட விருதும் பெற்றவர்.