கவிக்கோ அப்துல் ரகுமான் (1937-2017) தமிழகத்தின் “வானம்பாழ” கவிதை இயக்கத்தின் முத்த தொமகன். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி புரிந்தவர். இவரது முதல் கவிதைத் தொகுதியான “பால்வீதி மூலம் தன்னை ஒரு சோதனைப்படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டவர். தனது கவிதைகளில் கவிதையை நேரடியாக பேசவைக்காமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள்,குறியீடுகள் மூலம் வெளியீட்டுமுறையை அமைத்துக்கொண்டவர்.”புதுக்கவிதைகளில் படிமங்கள்” என்ற ஆய்விற்காக முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ‘ஹைக்கூ கஐல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை தமிழகத்தில் முனைந்து பரப்பியதில் புகழ் பெற்றவர். 1960 களுக்குப்பின் கவிதை உலகிற்கு வந்த இவர் தனது கவிதை எழுத்துக்களாலும். கவியரங்க கவிதை உரைகளாலும் தமிழ்ச்சூழலின் கவிதைக்கான பார்வையை தடம் மாற்றியவர்.
சுமார் 15க்கும் மேற்ப்பட்ட கவிதை, ஆய்வு நூல்களைப் படைத்தவர் தனது “ஆலாபனை” நூலுக்காக சாகித்ய அகாதமி விருதுப்பெற்றவர். கலைமாமணி விருதும், பாரதிதாசன் விருதும் இவரைத்தேடி வந்தன. தனக்குப்பிறகும் ஒரு கவிதைத்தலைமுறை உருவாக தனது கவிதைகளோடு வரலாற்றில் பயணித்தவர்.
தமிழ் கவிதையின் மாபெரும் ஆளுமையாகவும், அடையாளமாகவும் திகழ்ந்த கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களை ஒரு ஆவனப்படமாக தயாரிக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிஙகப்பூர் முஸ்தபா அவர்கள் பெரு முயற்சி எடுத்தார்கள். சிங்கப்பூர் முஸ்தபா அவர்களின் தயாரிப்பில் உருவான “கவிக்கோ – கவிஞர்களின் கவிஞர்” அன்மையில் சென்னையில் கவிக்கோ மன்றத்தில் வெளியீடுக் கண்டது.
இவ்விழா நிகழ்வுக்கு வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார். கவிஞர் அயாஸ் பாஷா
வரவேற்புரை ஆற்றினார். திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, பேரா. பர்வீன் சுல்தானா, முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற
நீதியரசர் கே.என்.பாஷா, கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பங்கு பெற்றனர்.
விழாவிற்கு தலைமை வகித்த வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தர் விசுவநாதன் அவர்களுடன் ஆவணப்பட தயாரிப்பாளர் வி.கி.முஸ்தபா மற்றும் இயக்குநர் லிங்குசாமி
வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தர் விசுவநாதன்
” கவிக்கோ அவர்கள் பாண்டிய நாட்டிலிருந்து தொண்டை
நாட்டிற்க்கு கிடைத்த தமிழ்க்கொடை. மதுரையிலே
அவர் பிறந்திருந்தாலும் தொண்டை நாட்டில் ( வேலூர்
மாவட்டம்) தான் பணி புரிந்தார், தமிழ்ப்பணி ஆற்றினார்.
அவருடைய கவிதைகள் பேசாத பொருள் இல்லை. அரசாட்சி,
நிர்வாகம், போன்ற கூறுகளில் அவர் எழுதிய கவிதை வரிகள்
இன்றைய அரசியல் அவலங்களை அங்ககத்தொனியோடு
அமைந்திருக்கின்றன.
அவரின் கவிதை தத்துவங்கள் இன்றைய தலைமுறைக்கு
மட்டுமல்ல எதிர்காலத்தலைமுறைக்கும் பயன்படக்கூடியவை”
என்றார்.
கவிக்கோவின் பல கவிதைகளை மேடையில் வாசித்து
அரங்கின் பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தார்.
நீதியரசர் கே.என்.பாஷா
இந்த விழா நம் நெஞ்சையெல்லாம் நெகிழவைக்கிற விழா.
சிங்கப்பூர் முஸ்தபா என்ற சிங்கதமிழர் முஸ்தபா அவர்கள்தான்
இந்த விழா நடைபெறும் கவிக்கோ மன்றத்தையும் நமக்கு
வழங்கினார். தமிழ் கூறும் நல்லுலகெங்கும் முஸ்தபா அவர்கள்
கவிக்கோ அவர்களின் பெயரையும் புகழையும் பரப்பி
வருகின்றார்.
திரைத்துறையில் இருந்தால்தான் கவிஞர்களுக்கு பெயரும்
புகழும் கிடைக்கும் என்ற நிலையில், கவிக்கோ அவர்கள்
திரைத்துறையையே எட்டிப் பார்க்காமல் திரைப்பாடல்கள்
எதுவும் எழுதாமல் உலகெங்கும் தனது கவிதைகளுக்கென்று
பெரும் செல்வாக்கையும் தனிச் சிறப்பையும் பெற்றவர்.
இயக்குனர் லிங்குசாமி
“கவிக்கோவின் கவிதைகளை நாங்கள் காலந்தோறும்
இசைத்துக் கொண்டிருக்கிறோம். எனக்கும், என் நண்பர்களுக்கும்
கவிக்கோவின் பனையூர் இல்ல சந்திப்புகள் ஒரு பொற்காலம்.
ஹைக்கூ என்ற வடிவத்தையே தமிழில் முதன் முதலில்
அறிமுகப்படுத்தியவர் கவிக்கோதான். அதனால் தான் கவிக்கோ
பெயரில் ஆண்டுதோறும் ஹைக்கூ கவிதைப்போட்டியை
கவிக்கோ பெயரில் நடத்திவருகின்றோம்.
கவிக்கோவின் குடும்பப்பிரதிகளாக நாங்கள் வாழ்ந்துக்
கொண்டிருக்கிறோம்..
மின்மினியின் வெளிச்சம் போல், பூவின் வாசம் போல்
மகாகவி இக்பாலின் கவிதை வரிகளை எங்களுக்கு பாய்ச்சி
எங்களையும் கவிஞர்களாக உருவாக்கினார்.
கவிஞானியாக வாழ்ந்த கவிக்கோவுக்கு திரைப்படங்களும்
மிக நெருக்கமாக அமைந்திருந்தது.
பேரா. பர்வீன் சுல்தானா
“கவிக்கோ அவர்களை இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல
அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்பவர் சிங்கப்பூர்
முஸ்தபா அவர்கள். அதனால் தான் இந்த ஆவணப்படத்தை
சிங்கப்பூர் முஸ்தபா அண்ணன் அவர்கள் தயாரித்துள்ளார்.
கவிக்கோ அவர்கள் எந்த கூட்டிலும் அடைபடாத
வானம்பாடியாக , எல்லோருக்குமான கவிஞராக வாழ்ந்தார்.
தனது கவிதைகள் மூலம் பல ஆயிரம் தமிழ் இளைஞர்களை
கவிஞர்களாக மாற்றிக்காட்டினார். அதனால்தான் அவர்
கவிஞர்களின் கவிஞராக வாழ்ந்து வருகிறார்.
புத்தனின் பல்லை காப்பாற்றுவது போல் கவிக்கோவின்
சொல்லையும் நாம் காப்பாற்றவேண்டும்.
கவிஞர் மனுஷ்யபுத்திரன்
வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் தளமாக
இந்த கவிக்கோமன்றத்தில் கவிக்கோவை பற்றிப்பேசுகிறோம்.
தலைமுறை இடைவெளிகளால் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின்
பெயர்கள் கூட நம் இளைஞர்களுக்கு தெரியவில்லை.
கவிக்கோ ஆவணப்படத்தில் இசை, ஒளிப்பதிவு,
போன்றவைகள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
முஸ்தபா போன்றவர்களின் ஆதரவு இல்லையென்றால்
இந்த கவிக்கோ ஆவணப்படம் உருவாகியிருக்காது. மூன்று
தலைமுறைகள் கவிக்கோவினால் பாதிக்கப்பட்டு ஒரு கவிதைப்
பாரம்பரியமே உருவாகிவிட்டது. கஸல் கவிதைகளையும் சூஃபி
தத்துவங்களையும் கவிதைகளாகத்தந்தவர் கவிக்கோ.
வாழ்நாள் முழுவதும் விருதுகளுக்கும், பரிசுகளுக்கும்
அலைந்துக்கொண்டிருக்கும் கவிஞர்களை போலல்லாமல்
தனக்கென்று ஒரு ராஜபாட்டையில் நடந்து தமிழகத்தில்
அடுத்த ஒரு கவிதைத் தலைமுறையை உருவாக்கியவர்
கவிக்கோ. மானுடப் பொதுமையை நெஞ்சில் தாங்கி அவர்
உருவாக்கிய அறம், அன்பின் வெளிச்சம் , கவிதை ஆளுமைகள்
இது போன்ற ஆவணப்படங்களால் காலந்தோறும் கொண்டு
செல்லப்படவேண்டும்


