மொழிபெயர்ப்புக் கவிதை

0
844
ச. மோகனப்பிரியா

மூலக்கவிதை: ஓவியர் கில்லியன் எலித் ஓமரா


காரிருளில் ஒளிக்காகக்

காத்திருக்கும்

சின்னஞ்சிறு மின்மினியே !

நம்பிக்கையின் மயக்கும்பொறிகளில்

ஒளிரும் கரித்துண்டின் கங்கை

எதிர்பார்க்கும்

இனியமையான செந்தழல் ஒளியின் பார்வையாளரே !

எங்ஙனம் மகிழ்ச்சி மீண்டும் வருமென்றோ

அல்லது

எப்படி வெளிச்சம் வருமென்றோ

காணக் கடினமாய் முயல்பவரே!

தாமே ஒளிர்பவரே! சற்று நில்லுங்கள்!

நீவிர் கொஞ்சம் பொறுத்தால்

என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்,

உமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும்

உண்மையின் ஒளியினை

நிச்சயம் உங்களால் காண முடியும்

கவிஞர் பற்றிய குறிப்பு

Gillian Eilidh O’Mara ( கில்லியன் எலிட் ஓ’மாரா )

பலமுறை விருது பெற்ற ஸ்காடிஷ்-ஐரிஷ் ஓவியக் கலைஞர், எழுத்தாளர் மற்றும் ‘USA Today’ சிறந்த விற்பனை ஆசிரியர் ஆவார். கவுண்டி டர்ஹாமில் வசிக்கும் அவர், பிபிசி மற்றும் பென்குயின் ராண்டம் ஹவுஸ் போன்ற முன்னணி பதிப்பகங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார். குழந்தைகளுக்கான பல படக்கதைகளுக்கு ஓவியங்கள் மற்றும் பெரியவர்களுக்கான புத்தகங்களில் படங்கள் வரைந்து வருகிறார். குழந்தைகளுக்கான அரங்குகளில் தொடர்ந்து பணியாற்றியும் குழந்தைகளுக்கான கதைசொல்லியாகவும் தொடர்ந்து இருந்து வருகிறார். ‘ஹிடன் ஸ்டோரி’ இயக்குநராக, கதையாடல் மூலம் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கிறார்.